லட்சியத்தை முடிக்க இதுவே மூலமந்திரம்.!
ஒன்றை எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்ற உள்மனத்தின் உந்துதல்தான் ஊக்கம்! சாதனையாளர்கள் மூன்று படிநிலைகளைச் சந்திக்க வேண்டும். முதற்படி, ஆசைப்படுவது. அடுத்தது, ஆசைப்படுவதை அடைய முடியுமென்று அழுத்தமாக நம்புவது. மூன்றாவது, அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை மாறாத ஊக்கத்துடன் உழைப்பது. லட்சியத்தை முடிக்க இதுவே மூலமந்திரம். இதன் சூட்சுமத்தைப் புரிந்து செயல்பட்டால், வெற்றித்தேவதையின் கைகளில் இருக்கும் மாலை, ஒரு நாள் உங்கள் கழுத்தை நிச்சயம் அலங்கரிக்கும்!
|