|
அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்துவிடும்.!
முதல் பார்வையிலேயே ஏற்படும் காதலும், நட்பும் முழுமையானவை அல்ல. சோதனை வரும்போது, இந்தக் காதலும் நட்பும் சொல்லிக் கொள்ளாமலே கழன்று விடும். சோதனைகளின் வெம்மை தாளாமல்,பாளம் பாளமாகப் பிளந்து கிடக்கும் நெஞ்சில், அமுத தாரையாக அன்பைப் பொழிந்து, வாழ்வின் மீது வசீகரத்தை வளர்ப்பதே நட்பு!
அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்துவிடும். தன்னலத்தின் ஆட்சியிலோ அன்பு அழிந்து விடும். காலை நேர நிழல், நேரம் ஆக ஆகக் குறையும். மாலை நிழல் நீண்டு கொண்டே போகும். நல்ல நட்பு, மனிதனின் மரணம் வரை மாலை நிழலாக நீளும். வறுமையிலும் துயரத்திலும் இளைப்பாறுதல் தருவது இனிய நண்பர்களே!
|