மனிதம் வளர்ப்பதுதான் மதம்!
`உண்மை ஒன்றுதான். அது பல வடிவங்களில் பார்க்கப்டுகிறது’ என்ற ரிக் வேதத்தின் குரல்தான், `ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரில் எதிரொலிக்கிறது.
`அன்பே கடவுள்’ என்பதை மறப்பவன் இந்து அல்ல. `ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டு’ என்ற கர்த்தரின் வாசகத்தை வாழ்வில் கடைப் பிடிக்காதவன் எப்படி உண்மை
யான கிறிஸ்துவனாக முடியும்? சகோதரத்துவத்தில் நம்பிக்கை அற்றவன் நபிகள் வழி நடக்கும் இஸ்லாமியன் என்று யார் சொல்லக் கூடும்?
அன்பையே சிந்தித்து, அன்பையே மூச்சுக் காற்றாக சுவாசித்து, ஆண்டவனையும் அன்பின் வடிவாகவே தரிசித்து மனிதம் வளர்ப்பதுதான் மதம்! |